ADDED : ஜன 06, 2024 08:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:மனிதநேயம் ஐ.ஏ.எஸ்., கட்டணமில்லா கல்வியகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
உரிமையியல் நீதிபதி பதவியில், 245 பணியிடங்களை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி., சார்பில் நடத்தப்பட்ட முதன்மை தேர்வு முடிவு வெளியிடப்பட்டு உள்ளது. இதில், மனிதநேயம் கட்டணமில்லா கல்வியகமும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலும் இணைந்து நடத்திய பயிற்சியை பெற்ற, 31 வழக்கறிஞர்கள், நேர்முக தேர்வுக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மனிதநேய அறக்கட்டளை நிறுவன தலைவர் சைதை துரைசாமி மற்றும் தமிழக பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் ஆகியோர், மாணவ, மாணவியரை பாராட்டினர். தேர்ச்சி பெற்றவர்களுக்கு, வரும், 11ம் தேதி முதல், நேர்முக தேர்வு பயிற்சி அளிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.