ADDED : மார் 15, 2025 11:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட வேளாண் பட்ஜெட்டில், 2022 - 23ல் தமிழகத்தில் மொத்த சாகுபடி பரப்பு, 155 லட்சம் ஏக்கர் என்றனர். இந்த பட்ஜெட்டில், 151 லட்சம் ஏக்கராக உள்ளது என்று கூறியுள்ளனர். சாகுபடி பரப்பு, கடந்த ஆண்டைவிட, இந்தாண்டு, 4 லட்சம் ஏக்கர் குறைந்திருக்கிறது என்பது உண்மை. அதை மறைக்க, 2019 - 2020 சாகுபடி பரப்பை விட, இந்தாண்டு உயர்ந்திருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளனர். விவசாயிகளை தொடர்ந்து வஞ்சித்து வருவதையே, வேலையாக வைத்திருக்கும் தி.மு.க., அரசின் வேளாண் பட்ஜெட், வெறும் காகிதக் குவியலே தவிர, வேறொன்றும் இல்லை.
அண்ணாமலை
தமிழக பா.ஜ., தலைவர்.