'நேரடியாக பேசினாலே போதும் அ.தி.மு.க.,-பா.ஜ., கூட்டணி அமையும்'
'நேரடியாக பேசினாலே போதும் அ.தி.மு.க.,-பா.ஜ., கூட்டணி அமையும்'
ADDED : ஜன 23, 2025 09:30 PM
திருநெல்வேலி:''அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியுடன் பா.ஜ., நேரடியாக பேசினாலே கூட்டணி ஏற்பட்டு விடும். இதற்காக ரெய்டு நடத்த வேண்டிய தேவையில்லை,'' என, சட்டசபை பா.ஜ., குழு தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
அவர் அளித்த பேட்டியில் மேலும் கூறியிருப்பதாவது:
தமிழக அரசு ரூ 8 லட்சம் கோடிக்கு மேல் கடன் வைத்துள்ளது. கடன் வாங்குவது தவறில்லை. ஆனால் நல்ல திட்டங்களுக்கு பயன்படுத்தி, மீண்டும் செலுத்த வேண்டும். தி.மு.க. அரசு மீது பல்வேறு வகைகளிலும் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
மின் கட்டண உயர்வு, வரி விதிப்பு அதிகரிப்பு, அண்ணா பல்கலையில் யார் அந்த சார்... என பல்வேறு பிரச்னைகள் வரும் சட்டசபை தேர்தலில் எதிரொலிக்கும்.
திருப்பரங்குன்றம் கோயில் மலை மீதான வழிபாடு குறித்த பிரச்னை இரு சமுதாயப் பிரச்னை. இதில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது. ராமநாதபுரம் எம்.பி., நவாஸ் கனி, மணப்பாறை எம்.எல்.ஏ., அப்துல் சமது ஆகியோர் அங்கு சென்றதால், நானும் அங்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

