தீபத்துாணில் தீபம் ஏற்றினார் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்
தீபத்துாணில் தீபம் ஏற்றினார் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்
ADDED : ஜன 24, 2026 07:35 PM

சென்னை: சென்னை சேத்துப்பட்டு சின்மயா பாரம்பரிய மையத்தில் நடந்த விழாவில், மேடையில் அமைக்கப்பட்டிருந்த தீபத்துாணில் உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீபம் ஏற்றினார்.ஹிந்து தர்மத்தை நிலை நிறுத்த பாடுபடுவோரை கவுரவிக்கும் வகையில் சென்னை தாரா பவுண்டேசன் சார்பில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சேத்துப்பட்டு சின்மயா மையத்தில் இந்த விழா நடந்தது.
விழாவில், உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கலந்து கொண்டார். விழாவின் தொடக்கமாக, மேடையில் அமைக்கப்பட்டிருந்த தீபத்துாணில் அவர் தீபம் ஏற்றினார்.இவ்வாறு தீபத்துாணில் அவர் தீபம் ஏற்றியபோது, அங்கு கூடியிருந்த அனைவரும் எழுந்து நின்று ஆரவாரம் செய்தனர். திருப்பரங்குன்றம் முருகனுக்கு அரோகரா என்றும், வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்றும் பக்தர்கள் முழங்கினர்.
விழாவில், முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் கோபால்சாமி, ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம், சைவ, வைணவ ஆன்மிக பெரியோர், அமைப்பின் நிறுவன தலைவர் வினோத் ராகவேந்திரா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஹிந்து தர்மத்துக்கு பணியாற்றுவோர் பலர், நிகழ்ச்சியில் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

