நீதிபதி நந்தினிதேவி மீண்டும் கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதியாக நியமனம்
நீதிபதி நந்தினிதேவி மீண்டும் கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதியாக நியமனம்
ADDED : மே 20, 2024 09:02 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: நீதிபதி நந்தினி தேவி மீண்டும் கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இவர் முன்னர் பொள்ளாச்சி பாலியல் வழக்கை கடந்த 5 ஆண்டுகளாக உன்னிப்பாக கவனித்து வந்தார்.
கடந்த 9-ம் தேதி சேலம் மகளிர் நீதிமன்ற நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

