ADDED : ஜன 01, 2025 06:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அண்ணா பல்கலை விவகாரத்தில், குற்றவாளி ஞானசேகரன் தி.மு.க.,வைச் சேர்ந்தவன் என்பதால், முழு உண்மைகளையும் வெளிக்கொண்டு வராமல், மறைக்க, தி.மு.க., அரசு முயற்சிக்கிறது.
இதைக் கண்டித்து, அடுத்தக்கட்ட போராட்டத்தை பா.ஜ., முன்னெடுக்கிறது. நியாயம் கிடைக்கும் வரை பா.ஜ., போராட்டம் தொடரும். தமிழக பா.ஜ., மகளிரணி சார்பில், மாநில தலைவர் உமாரதி தலைமையில், மதுரையில் இருந்து சென்னை வரை நீதிப்பேரணி நடக்க உள்ளது. வரும் ஜன., 3ம் தேதி துவங்கவிருக்கும் இந்த பேரணி, சென்னையில் நிறைவு பெறும்போது, தமிழக கவர்னர் ரவியை சந்தித்து, மகளிர் அணி சார்பில் கோரிக்கை மனு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
- அண்ணாமலை
தமிழக பா.ஜ., தலைவர்.

