காணும் பொங்கல்: சென்னையில் பாதுகாப்பு பணியில் 17,000 போலீசார்
காணும் பொங்கல்: சென்னையில் பாதுகாப்பு பணியில் 17,000 போலீசார்
ADDED : ஜன 17, 2024 07:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: இன்று காணும் பொங்கலை கொண்டாடுவதற்காக சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதி மக்கள் மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கில் கூடுவர்.
பாதுகாப்பு பணிக்காக மெரினா கடற்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 17,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
12 முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
நீச்சல் தெரிந்த 200 தன்னார்வலர்கள் மெரினாவில் தயார் நிலையில் உள்ளனர். காணும் பொங்கலின் போது வீலிங், பைக் ரேசில் ஈடுபடுவோர் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

