'அன்பு மன்னிப்பு கேட்காது' கமல் கட்சியினர் 'போஸ்டர்'
'அன்பு மன்னிப்பு கேட்காது' கமல் கட்சியினர் 'போஸ்டர்'
ADDED : ஜூன் 04, 2025 12:50 AM

சென்னை:' நடிகர் கமல் மன்னிப்பு கேட்க வேண்டும்' என, கர்நாடக திரைப்பட வர்த்தக சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
அதேநேரத்தில், கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு, கமல் எழுதியுள்ள கடிதம்:
கன்னட மொழியை தாய் மொழியாக கொண்ட மக்கள் மீது, நான் மிகுந்த அன்பு வைத்துள்ளேன். என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது வருத்தம் அளிக்கிறது.
கன்னட மக்களின் உணர்வுகளை நான் மதிக்கிறேன். யாரையும் புண்படுத்துவது என் நோக்கமல்ல. தென்னிந்திய மக்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற எண்ணத்திலேயே பேசினேன். கன்னட மொழியை சிறுமைப்படுத்தும் நோக்கம் எனக்கு துளியும் இல்லை.
இவ்வாறு கமல் கூறியுள்ளார்.
இதற்கிடையில், 'அன்பு மன்னிப்பு கேட்காது; சத்தியம் தலை வணங்காது' என, தமிழகம் முழுதும் கமல் கட்சியினர் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

