பெண்களை காரில் துரத்திய கும்பல்; கண்டித்தார் கனிமொழி
பெண்களை காரில் துரத்திய கும்பல்; கண்டித்தார் கனிமொழி
ADDED : ஜன 30, 2025 09:36 PM

சென்னை: பெண்களை காரில் துரத்தி சென்று அச்சுறுத்திய சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது என தி.மு.க., எம்.பி., கனிமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நள்ளிரவில் தி.மு.க., கொடி கட்டிய காரில் பெண்களை துரத்திய விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மற்றொரு காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சமூக வலைதளத்தில் கனிமொழி வெளியிட்டுள்ள அறிக்கை:சமீபத்தில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பெண்கள் ஓட்டி வந்த வாகனத்தை, ஆண்கள் சிலர் வழிமறித்து அவர்களை விரட்டிச் சென்று அச்சுறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துவது மட்டுமின்றி வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
குற்றம் செய்தவர்கள் யாராக இருப்பினும், முறையான விசாரணை மூலம் உடனடியாக அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதை போலீசார் உறுதி செய்ய வேண்டும்.
அதே வேளையில், பெண்கள் பாதுகாப்பில் எந்த வித சமரசமும் இருக்ககூடாது என்று நினைப்பவர் நமது முதல்வர் அவர்கள். இவ்வாறு கனிமொழி கூறியுள்ளார்.

