'ஜாதியைச் சொல்லி தூத்துக்குடி மக்களை ஏமாற்றுகிறார் கனிமொழி' *பவானியில் சீமான் காட்டம்
'ஜாதியைச் சொல்லி தூத்துக்குடி மக்களை ஏமாற்றுகிறார் கனிமொழி' *பவானியில் சீமான் காட்டம்
ADDED : ஜன 30, 2025 10:10 PM
பவானி,:''நான் உங்கள் ஜாதி ஆளு எனக்கூறி, பாவப்பட்ட துாத்துக்குடி மக்களை, கனிமொழி நம்ப வைத்து ஏமாற்றுகிறார்,'' என, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாக கூறினார்.
ஈரோடு மாவட்டம், பவானி அருகே உள்ள பெருமாள் மலையில், நா.த.கட்சி., ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டி:
ஈ.வெ.ரா.,வை இழிவுபடுத்தி பேசியது, முன்னாள் முதல்வர் கருணாநிதிதான். அவரை இழிவுபடுத்திய பெரிய கூலி கருணாநிதிதான். மருமகன் உதயநிதி நெற்றியில் திருநீர் பூசியது கனிமொழிதானே. அப்படி இருக்கும்போது, உங்களை எப்படி கடவுள் மறுப்பாளர் என ஏற்க முடியும்? சமூக நீதியின் காவலராக தன்னை காட்டிக் கொள்ளும் கனிமொழி, தமிழகத்தில் சென்னை, கோவை, திருப்பூரில் போட்டியிடாமல் தூத்துக்குடிக்குச் சென்று போட்டியிட்டது ஏன்?
ஜாதியை சொல்லி ஏமாற்றும் கனிமொழி, அதே ஜாதியை சொல்லி ஏமாற்றி துாத்துக்குடியில் வெற்றி பெற்றார். இன்னும், துாத்துக்குடி மக்கள், தங்கள் ஜாதியைச் சேர்ந்தவர் கனிமொழி என நம்பி ஏமாந்து கொண்டுள்ளனர்.
கருணாநிதியின் மகள் எப்படி நாடார் ஆக முடியும்? கனிமொழி நாடார் என்றால், முதல்வர் ஸ்டாலின், அழகிரி, தமிழரசு ஆகியோரும் நாடார்தானே. ஒரு அப்பாவுக்கு இரண்டு ஜாதிகள் இருக்குமா?
முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின், பூஜை அறையில் சமஸ்கிருத ஸ்லோகம் சொல்வதை காட்டட்டுமா? அத்திவரதர் கோவிலில் குடும்பமாக நின்று கும்பிட்டது யார்?முருகனை நான் தொட்டேன் சரி. நீங்கள் ஏன் முருகனுக்கு மாநாடு போட்டீர்கள்? இது தான் கடவுள் மறுப்பா? ஈ.வெ.ரா., கொள்கை பேசுவோர் சாதிக்காததை முன்னாள் முதல்வர் ஜெ., சாதித்து காட்டினார். பொது தொகுதியில் தலித்தை நிறுத்தி வெற்றி பெற செய்தார். தி.மு.க. கட்சி ஆ.ராஜாவை, தமிழனாக பார்க்காமல், தாழ்த்தப்பட்டவனாக பார்த்து, நீலகிரி தொகுதியில் நிறுத்தியது.
எம்.ஜி.ஆர்., தன் சொத்துக்களை காது கோளாதவர்களுக்கு எழுதி வைத்து சென்றார். ஈ.வெ.ரா., எதை யாருக்கு எழுதி வைத்தார? சொந்த செல்வாக்கு, கட்சி செல்வாக்கு இருக்கிறது என்றால், தூத்துக்குடியிலும் பணம் கொடுக்காமல் கனிமொழி வென்று காட்ட வேண்டும்.
இவ்வாறு சீமான் கூறினார்.

