சீமான் பேச்சை கவனிப்பதில்லை என்கிறாார் கார்த்தி எம்.பி.,
சீமான் பேச்சை கவனிப்பதில்லை என்கிறாார் கார்த்தி எம்.பி.,
ADDED : ஜன 30, 2025 02:18 AM
காரைக்குடி:''சீமானின் பேச்சை நான் கவனிப்பதில்லை,'' என காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம் கூறினார்.
காரைக்குடியில் அவர் கூறியதாவது:
சீமானின் பேச்சை நான் கவனிப்பதில்லை. 50 ஆண்டிற்கு முன் ஒருவர் பேசியது குறித்து, இப்போது பேசுவது தேவையற்றது. எந்த கட்சிக்கும் எந்த தொகுதியும் பட்டா போட்டு கொடுக்கவில்லை. கூட்டணி கட்சியுடன் பேசி தான் சீட் வழங்கப்படும். கூட்டணி பேச்சின் அடிப்படையில் தான் தி.மு.க., ஈரோடு தேர்தலில் நிற்கிறது.
தமிழகத்தில் முதல்வராக வருவதற்கு ஜாதி பாகுபாடு இல்லை. தேர்தலில் பெரும்பான்மை பெற்ற ஒரு கட்சித் தலைவர் முதல்வராக முடியும். வேங்கைவயல் விசாரணையில் திருமாவளவனுக்கு ஏதேனும் விசாரணை வேண்டுமென்றால், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கேட்கலாம்.
பி.எஸ்.என்.எல்., வீழ்ச்சிக்கு பல காரணம் உண்டு. முதல் காரணம், 4 ஜி டெக்னாலஜியை அமல்படுத்தாததால் வாடிக்கையாளர்கள் தனியார் நிறுவனத்திற்கு சென்று விட்டனர். தனியார் நிறுவனம் '6ஜி'க்கு செல்லும் நிலையில் அதற்கு நிகராக, பி.எஸ்.என்.எல்., புதிய டெக்னாலஜியை அறிமுகப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

