தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/பா.ஜ., தலைவருக்கு கருணாநிதி பாராட்டு

பா.ஜ., தலைவருக்கு கருணாநிதி பாராட்டு

பா.ஜ., தலைவருக்கு கருணாநிதி பாராட்டு


UPDATED : செப் 13, 2013 01:27 AM

ADDED : செப் 11, 2013 11:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 13, 2013 01:27 AM ADDED : செப் 11, 2013 11:50 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:'தமிழ் மொழியை, நாட்டின், இரண்டாவது ஆட்சி மொழியாக, அங்கீகாரம் செய்ய வேண்டும்' என, பா.ஜ., செய்தி தொடர்பாளர் தருண்விஜய் பேசியதற்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி பாராட்டியுள்ளார்.

அவரது அறிக்கை:பா.ஜ., செய்தி தொடர்பாளரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான தருண்விஜய், 'தமிழ் மொழியை நாட்டின், இரண்டாவது ஆட்சி மொழியாக, அங்கீகாரம் செய்ய வேண்டும்' என, கூறியிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. வட மாநிலங்களின் நண்பர்கள், தங்களுக்கு உரித்தான உயர் மனப்பான்மை காரணமாக, பழமை வாய்ந்த, புகழ் பெற்ற தமிழ்மொழியின் ஆழத்தை இன்னும் உணரவில்லை. வட மாநிலங்களிலுள்ள அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், தமிழ் மொழியை பரப்புவதற்காக, சிறப்புத் திட்டம் ஒன்றை, மத்திய அரசு வகுத்து செயல்படுத்த வேண்டும்.

நாட்டின் மறுமலர்ச்சிக்கும், புதிய கலாசார மாற்றத்துக்கும் உறுதுணையாக இருக்கும், தமிழ்மொழிக்குரிய மரியாதையையும், தகுதியையும் அளித்துள்ளோமா என்பதை சிந்திக்க வேண்டும், என,, தருண்விஜய் பேசியிருப்பது, தமிழ் உணர்வுள்ள அனைவருக்கும் பெருமிதம் தருகிறது. தருண்விஜய் பேசியதை, 'டிவி'யில் பார்த்ததும், அவருக்கு பாராட்டு தெரிவிக்குமாறு கே.பி.ராமலிங்கத்திடம் கூறினேன். தருண்விஜயின் உணர்வுகளைப் பாராட்டி, நன்றி செலுத்துகிற அதே வேளையில், தமிழ்மொழியை, மத்திய அரசின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக ஏற்க வேண்டும். இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us