தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/செம்மரம் கடத்தல் வழக்கு கருணாநிதி கோரிக்கை

செம்மரம் கடத்தல் வழக்கு கருணாநிதி கோரிக்கை

செம்மரம் கடத்தல் வழக்கு கருணாநிதி கோரிக்கை


UPDATED : ஜூன் 20, 2015 01:11 AM

ADDED : ஜூன் 18, 2015 11:27 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 20, 2015 01:11 AM ADDED : ஜூன் 18, 2015 11:27 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:தி.மு.க., தலைவர் கருணாநிதியின் நேற்றைய அறிக்கை:

செம்மரம் கடத்தல் வழக்கில், கைது செய்யப்பட்ட, டி.எஸ்.பி., தங்கவேலு, 'அ.தி.மு.க., பிரமுகர்கள் நான்கு பேர் மற்றும் போலீஸ் அதிகாரிகள், 11 பேர் உட்பட, 37 பேருக்கு கடத்தலில் தொடர்பு உள்ளது' என கூறியதாக, போலீசார் முதலில் தெரிவித்தனர். ஆந்திர மாநில போலீசாரும் இதை உறுதி செய்தனர்.

இந்நிலையில், தங்கவேலுவிடம் விசாரணை நடந்த போது, 'செம்மரம் கடத்தலில் அரசியல்வாதிகளுக்கோ, போலீசாருக்கோ எந்தத் தொடர்பும் இல்லை' என, ஏற்கனவே சொன்னதை மாற்றிச் சொல்லியுள்ளார். இதில் இருந்தே, இந்த வழக்கை திசை திருப்பும் முயற்சிகள் வேகமாக நடப்பது நன்றாக தெரிகிறது. எனவே, செம்மரம் கடத்தல் வழக்கை, சி.பி.ஐ.,விசாரிப்பது தான் பொருத்தமாக இருக்கும்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us