ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை ஆதரித்தவர் கருணாநிதி: பா.ஜ.,
ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை ஆதரித்தவர் கருணாநிதி: பா.ஜ.,
ADDED : பிப் 15, 2024 01:56 AM
''ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான சட்டசபை தீர்மானம் தேவையற்றது,'' என பாரதிய ஜனதா தெரிவித்தது.
அக்கட்சியின் உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசியதாவது:
தென் மாநிலங்கள் சமூக மேம்பாட்டு நடவடிக்கையாலும், மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதாலும் சிறப்பான நிலைக்கு உயர்ந்துள்ள நிலையில், தொகுதிகள் எண்ணிக்கை குறையும்போது, நமக்கான குரல் அங்கு ஒலிப்பதற்கான வாய்ப்பு மறுக்கப்படுமோ என்ற அச்சம் நியாயமானது.
இந்த தீர்மானத்தில் உள்ள கவலையை பா.ஜ., புரிந்து கொள்கிறது. நிச்சயமாக எந்த இடத்தில், என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதை எங்கள் கட்சி எடுக்கும்.
தேர்தல் தீர்மானத்தை பொறுத்தவரை, ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது, அடுத்த தேர்தலில் வரப்போவது இல்லை. இது குறித்து கற்பனை செய்து, நடக்க வேண்டிய மாற்றத்தை நடக்க விடாமல் தடுப்பதாக இருக்கக்கூடாது.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, 'நெஞ்சுக்கு நீதி' புத்தகத்தில், 'ஒரே நாடு ஒரே தேர்தல்' கொண்டு வருவதற்கு ஆதரவை தெரிவித்துள்ளார்.
ஆகவே, இந்த தீர்மானம் தேவையற்றது.

