ADDED : ஆக 04, 2025 04:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தி.மு.க., உடன், முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் கள்ள உறவு வைத்திருந்தார். சட்டசபையில் அவர் பேசும்போது, கருணாநிதி படத்தை, தன் பூஜை அறையில் வைத்திருந்ததாக கூறினார்.
அன்றைக்கு ஏற்படுத்திய கள்ள உறவை இன்று நிஜப்படுத்தி உள்ளார். இது அ.தி.மு.க.,வுக்கு லாபம்; அவருக்கு அழிவு. அவர், தன் தலையில் மண்ணை அள்ளி போட்டுக் கொண்டார். அவர் செல்லாக்காசு; அவரைப் பற்றி பேச வேண்டியது இல்லை.
தனித்தே ஆட்சி அமைக்கும் தலைவராக அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி உள்ளார். இரு மொழிக் கொள்கையை, அ.தி.மு.க., விட்டுக் கொடுக்காது. பா.ஜ.,வுடன் கூட்டணியாக இருந்தாலும், அ.தி.மு.க.,வுக்கான கொள்கை -- கோட்பாடுகளில் என்றைக்கும் சமரசம் கிடையாது.
-பொன்னையன்
முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,