கரூர் உயிரிழப்பு சம்பவம் அமைச்சர்களுக்குள் குழப்பம்
கரூர் உயிரிழப்பு சம்பவம் அமைச்சர்களுக்குள் குழப்பம்
ADDED : அக் 17, 2025 01:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூரில், த.வெ.க., கூட்டத்தில் நெரிசலில் சிக்கி உயிரிழந்த, 41 பேரின் உடல்களை, ஐந்து மேஜைகளில், 25 டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர் என, சட்டசபையில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார். ஆனால், சட்டசபைக்கு வெளியே பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, 'எட்டு மேஜைகளில் பிரேத பரிசோதனை நடந்தது' என்று கூறியிருக்கிறார். பிரேத பரிசோதனைக்கு எத்தனை மேஜைகள் அமைத்தனர் என்பதிலேயே இத்தனை குழப்பம் ஏன்?
- அண்ணாமலை,
முன்னாள் தலைவர், தமிழக பா.ஜ.,