/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஜே.எஸ்.டபுள்யு., ஆலையில் தொழில்துறை பாதுகாப்பு பயிற்சி
/
ஜே.எஸ்.டபுள்யு., ஆலையில் தொழில்துறை பாதுகாப்பு பயிற்சி
ஜே.எஸ்.டபுள்யு., ஆலையில் தொழில்துறை பாதுகாப்பு பயிற்சி
ஜே.எஸ்.டபுள்யு., ஆலையில் தொழில்துறை பாதுகாப்பு பயிற்சி
ADDED : அக் 17, 2025 01:41 AM
மேச்சேரி, தமிழ்நாடு அரசு தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்ககம் சார்பில், மேற்பார்வையாளர்கள், தொழிலாளர்களின் தொழில் துறை பாதுகாப்பு விழிப்புணர்வையும், திறனை மேம்படுத்தும் நோக்கத்தின் ஒரு பகுதியாக, சேலம் ஜே.எஸ்.டபுள்யு., ஸ்டீல் லிமிடெட் தொழிற்சாலையில், கடந்த, 14, 15ல் பயிற்சி முகாம் நடந்தது.
தொழில் பாதுகாப்பு, சுகாதார இயக்கக கூடுதல் இயக்குனர் தினகரன், பயிற்சி பிரிவு கூடுதல் இயக்குனர் பிரேமாகுமாரி, துணை இயக்குனர் தர்மேந்திரா, சேலம் துணை இயக்குனர் ஸ்ரீனிவாசன், மேட்டூர் துணை இயக்குனர் இலக்கியா முன்னிலை வகித்தனர்.
அதில் விபத்து தடுப்பு, சம்பவ குறிப்பு, தொழில்துறை பாதுகாப்பின் முக்கியத்துவம், உற்பத்தி செயல் முறைகளில் அபாயங்கள், கட்டுப்பாட்டு நடவடிக்கை, தீ பாதுகாப்பு மேலாண் உபகரணங்கள் கையாளுதல், இயந்திர பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இப்பயிற்சி, 4 தனித்தனி குழுக்களாக ஏற்பாடு செய்து, ஒவ்வொரு குழுவிலும், 60 பேர் பங்கேற்றனர். ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் பலனடைந்தனர். ஏற்பாடுகளை ஆலை தலைவர் பிரகாஷ் ராவ், பாதுகாப்பு தலைவர் சுரேஷ் சுந்தரம் செய்தனர்.