ராமேஸ்வரத்தில் 30ம் தேதி காசி தமிழ் சங்கமம் நிறைவு விழா
ராமேஸ்வரத்தில் 30ம் தேதி காசி தமிழ் சங்கமம் நிறைவு விழா
ADDED : டிச 18, 2025 03:35 AM
சென்னை: ராமேஸ்வரத்தில் வரும் 30ம் தேதி நடக்க உள்ள, காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நிறைவு விழாவில், துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
உ.பி., மாநிலம் வாரணாசியில், 'நமோ காட்' என்ற படித்துறையில், 'காசி தமிழ் சங்கமம் 4.0' என்ற நிகழ்ச்சி, டிச., 2 முதல் 15ம் தேதி வரை நடந்தது. இந்நிகழ்ச்சியில், தமிழகத்தில் இருந்து, மாணவர்கள், கலைஞர்கள், விவசாயிகள், தன்னார்வலர்கள் என, பல்வேறு தரப்பினர் பங்கேற்றனர்.
'காசி தமிழ் சங்கமம் 4.0' நிகழ்ச்சி நிறைவு விழா, ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில், வரும், 30ல் நடக்க உள்ளது. இந்நிகழ்ச்சிக்கு, துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் தலைமை வகிக்க உள்ளனர்.
அனுபவ பகிர்வு, கொண்டாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன என, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

