தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ பா.ஜ.,வில் இணைந்தார் கஸ்துாரி

பா.ஜ.,வில் இணைந்தார் கஸ்துாரி

பா.ஜ.,வில் இணைந்தார் கஸ்துாரி


ADDED : ஆக 16, 2025 04:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 16, 2025 04:05 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: நடிகை கஸ்துாரி, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில், அக்கட்சியில் இணைந்தார்.

திரைப்படங்களில், 1990களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கஸ்துாரி. தற்போது, சமூக பிரச்னைகள் குறித்து, சமூக வலைதளங்களில் பதிவிடுவதுடன், 'டிவி' விவாத நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.

சென்னையில் சில மாதங்களுக்கு முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக அவரை, தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் சென்று, தமிழக போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், சென்னையில், பா.ஜ., தலைமை அலுவலகமான கமலாலயத்தில், அக்கட்சியின் தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில், பா.ஜ.,வில் கஸ்துாரி நேற்று இணைந்தார்.

நடிகையும், சமூக செயற்பாட்டாளருமான திருநங்கை நமிதா மாரிமுத்துவும், பா.ஜ.,வில் இணைந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us