திண்டுக்கல்லில் கடத்தப்பட்ட கான்ட்ராக்டர் குத்திக்கொலை
திண்டுக்கல்லில் கடத்தப்பட்ட கான்ட்ராக்டர் குத்திக்கொலை
ADDED : ஜூலை 25, 2025 01:45 AM

சாணார்பட்டி:கடத்தப்பட்ட திண்டுக்கல் மாநகராட்சி கான்ட்ராக்டர் காரிலேயே குத்திக் கொல்லப்பட்டார்.
திண்டுக்கல்லை சேர்ந்த ஒப்பந்ததாரர் முருகன், 56. தி.மு.க., அனுதாபியான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன் விரோதம் இருந்தது.
இரு தினங்களுக்கு முன் முருகன் கடத்தப்பட்டார். மதுரை, பாலமேடு அருகே இருப்பதை தெரிந்த போலீசார் அங்கு சென்றனர்.
இதையறிந்த கும்பல் அங்கிருந்து நத்தம் கோபால்பட்டிக்கு காரில் அவரை கடத்தினர். போலீசாரும் பின் தொடர, வழியில் காரில் வைத்தே முருகனை கத்தியால் குத்திக்கொலை செய்தனர்.
சாணார்பட்டி அருகே மணி யக்காரன்பட்டியிலிருந்து ஜோத்தாம்பட்டி செல்லும் வழியில் காரை நிறுத்திவிட்டு, கொலை கும் பல் தப்ப முயன்றது.
இவர்களில், திண்டுக்கல், மேட்டுப்பட்டியை சேர்ந்த வீரபத்திரன், சங்கர், விஜய், சரவணன், ஷேக்பரீத் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
கொலை நடந்த இடத்தில் திண்டுக்கல் எஸ்.பி., பிரதீப் விசாரித்தார்.