என் வாழ்க்கையை கெடுத்ததால் சந்தர்ப்பம் பார்த்து கொலை செய்தேன்: ஆசிரியர் கொலை வழக்கில் வாலிபர் வாக்குமூலம்
என் வாழ்க்கையை கெடுத்ததால் சந்தர்ப்பம் பார்த்து கொலை செய்தேன்: ஆசிரியர் கொலை வழக்கில் வாலிபர் வாக்குமூலம்
ADDED : ஜன 20, 2024 06:24 AM

சிதம்பரம், : என் வாழ்க்கையை கெடுத்ததால் சந்தர்ப்பம் பார்த்து கொலை செய்த தாக, உடற்கல்வி ஆசிரியர் கொலை வழக்கில் கைதா னவர் வாக்குமூலம் அளித் துள்ளார்.
சிதம்பரம் அடுத்த திருவக்குளம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (எ) அருண்பாண்டியன்,28; தனியார் பள்ளி உடற்கல்வி ஆசிரியரான இவர் கடந்த 17ம் தேதி நள்ளிரவு அண்ணாமலை நகர் திடல்வெளி பகுதியில் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுகுறித்து அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அருண்பாண்டியனை முன்விரோதம் காரணமாக அண்ணாமலை நகர் திடல் வெளியை சேர்ந்த சதீஷ்,29; கொலை செய்தது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து ஏ.எஸ்.பி., ரகுபதி தலைமையிலான தனிப்படை போலீசார், அண்ணாமலை பல்கலைகழக கே.ஆர்.எம்., விடுதி அருகே பதுங்கியிருந்த சதீஷை கைது செய்தனர்.
போலீசில் அவர் அளித்த வாக்குமூலம்:
படிக்கும் காலத்திலேயே எனக்கும், அருண்பாண்டியனுக்கும் பிரச்னை ஏற்பட்டது. அப்போது, அருண்பாண்டியன் மற்றும் அவரது தந்தையும் சேர்ந்து என் கழுத்தில் வெட்டினர். அதில், நான் நடக்க முடியாமல் செயலிழந்தேன். பின் படிப்படியாக மீண்டு வந்தேன்.
என் வாழ்க்கையை கெடுத்த, அருண்பாண்டியனை கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் அடிக்கடி வந்து கொண்டிருந்தது. அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.
இந்நிலையில், கடந்த 17ம் தேதி என் வீட்டின் அருகிலேயே வந்து சூதாடிக் கொண்டிருந்ததை பார்த்ததும் ஆத்திரம் ஏற்பட்டது.
இனியும் சும்மா விடக்கூடாது என முடிவு செய்து, வீட்டில் இருந்த வெட்டு கத்தியை எடுத்து வந்து, தலையை வெட்டி கொலை செய்தேன். இவ்வாறு வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்த கைது செய்யப்பட்ட சதீஷை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.