'நிட் - டெக்' பின்னலாடை இயந்திரவியல் கண்காட்சி திருப்பூரில் துவக்கம்
'நிட் - டெக்' பின்னலாடை இயந்திரவியல் கண்காட்சி திருப்பூரில் துவக்கம்
ADDED : மார் 01, 2024 09:37 PM

திருப்பூர்:'ஹைடெக் இன்டர்நேஷனல் டிரேடு பேர் இந்தியா' சார்பில், திருப்பூர் அருகே, திருமுருகன்பூண்டியிலுள்ள கண்காட்சி மைதானத்தில், 17வது 'நிட் - டெக்' கண்காட்சி நேற்று துவங்கியது.
பின்னலாடை தொழிலில் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள், கண்காட்சி யில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அமெரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா, துருக்கி, சீனா, சிங்கப்பூர், ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளின் நிறுவனங்கள் பங்கேற்று உள்ளன.
கண்காட்சி குறித்து, பியோ தலைவர் சக்திவேல் கூறியதாவது:
நிட் - டெக் கண்காட்சி, 17வது முறையாக திருப்பூரில் நடக்கிறது. கடந்த கண்காட்சியைக் காட்டிலும், 20 சதவீதம் ஸ்டால்கள் அதிகம். அதாவது, 325 ஸ்டால்கள் கண்காட்சியில் இருக்கின்றன.
'ஆட்டோமேட்டிக் ரோபோ' தொழில்நுட்பத்துடன் இயந்திரங்கள் அறிமுகமாகியுள்ளன. தொழிலாளர்கள் பற்றாக்குறை இருந்தாலும், அதை நிவர்த்தி செய்யும் வகையில் நவீன இயந்திரங்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன.
நிட் - டெக் கண்காட்சி வாயிலாக, திருப்பூரின் உற்பத்தியும், ஏற்றுமதியும் மேம்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கண்காட்சி நாளை மறுதினத்துடன் நிறைவுஅடைகிறது.

