கொச்சுவேலி - வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரயில்
கொச்சுவேலி - வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரயில்
ADDED : ஆக 19, 2026 04:32 AM
மதுரை: வேளாங்கண்ணி சர்ச் திருவிழாவை முன்னிட்டு கேரள மாநிலம் கொச்சுவேலி-வேளாங்கண்ணி இடையே மதுரை வழியாக வாராந்திர சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஆக.29, செப்.5 (சனி தோறும்) இரவு 7:30 மணிக்கு கொச்சுவேலியில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06115), மறுநாள் காலை 8:40 மணிக்கு வேளாங்கண்ணி செல்கிறது. மறுமார்க்கத்தில் ஆக.30, செப்.6 (ஞாயிறு தோறும்) இரவு 7:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06116), மறுநாள் காலை 7:30 மணிக்கு கொச்சுவேலி செல்கிறது.
இந்த ரயில், நெய்யாட்டின்கரா, குழித்துறை, இரணியல், நாகர்கோவில் டவுன், வள்ளியூர், நாங்குநேரி, திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.
'3 'ஏசி' மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 11 ஸ்லீப்பர் பெட்டிகள், 4 பொது பெட்டிகள், 2 மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது.
நாளை (ஆக.20) காலை 8:00 மணிக்கு முன்பதிவு தொடங்குகிறது.
