sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஊட்டி, கொடைக்கானல் போகணுமா; இ-பாஸ் கட்டாயம் வாங்கணும்!

/

ஊட்டி, கொடைக்கானல் போகணுமா; இ-பாஸ் கட்டாயம் வாங்கணும்!

ஊட்டி, கொடைக்கானல் போகணுமா; இ-பாஸ் கட்டாயம் வாங்கணும்!

ஊட்டி, கொடைக்கானல் போகணுமா; இ-பாஸ் கட்டாயம் வாங்கணும்!


UPDATED : அக் 01, 2024 07:51 PM

ADDED : செப் 30, 2024 08:38 PM

Google News

UPDATED : அக் 01, 2024 07:51 PM ADDED : செப் 30, 2024 08:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ஊட்டி, கொடைக்கானல் செல்லும் வாகனங்களுக்கு இ-பாஸ் பெறும் நடைமுறை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

சுற்றுலா மையங்களான ஊட்டி, கொடைக்கானலில் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வந்ததால், நெரிசலை கட்டுப்படுத்தவும், வாகன எண்ணிக்கையை கணக்கெடுக்கவும் கோர்ட் உத்தரவுப்படி மே 7ம் தேதி முதல் இ-பாஸ் என்ற நடைமுறை கொண்டு வரப்பட்டது. ஜூன் 30ம் தேதியுடன் இந்த நடைமுறை முடிந்து, பின்னர் இன்று (செப்.30) வரை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்றுடன் இ-பாஸ் நடைமுறை முடியும் நிலையில் மறு உத்தரவு வரும் வரை இந்த நடைமுறையை சென்னை ஐகோர்ட் நீட்டித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திண்டுக்கல் கலெக்டர் பூங்கொடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது;

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு வரும் அனைத்து வாகனங்களுக்கும் இ-பாஸ் பெற்று அனுமதிக்கும் முறை 07.05.2024 முதல் 30.09.2024 வரை அமல்படுத்தப்பட்டு தற்போது வரை நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் பெற்று அனுமதிக்கும் நடைமுறையை சென்னை உயர்நீதிமன்றம் மறுஉத்தரவு வரும் வரை நீட்டித்துள்ளது.

எனவே, கொடைக்கானலுக்கு வரும் பொதுமக்கள் தங்களின் வாகனங்களுக்கு ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள 'epass.tnega.org” என்ற இணையதளத்தில் உரிய விவரங்களை உள்ளீடு செய்து இ-பாஸ் பெற்று பயணிக்கலாம். மேலும் இ-பாஸ் பெற விண்ணப்பிப்பது தொடர்பாக ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் உள்ளுர் வாகனங்களுக்கு உள்ளூர் இ-பாஸ் (Local e Pass) பெறுவது தொடர்பாக ஏற்படும் சந்தேகங்களுக்கு தொலைபேசி எண் : 0451-2900233, 9442255737 வாயிலாக சம்பந்தப்பட்ட அலுவலர்களை தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.இதேபோல, நீலகிரி மாவட்ட நிர்வாகமும், ஊட்டி வருவோர் கட்டாயம் இ-பாஸ் பெற வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.






      Dinamalar
      Follow us