ADDED : அக் 31, 2024 03:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தீபாவளியை முன்னிட்டு பயணிகள் வரத்தின்றி முக்கிய சுற்றுலாத்தலங்கள் வெறிச்சோடின.
சர்வதேச சுற்றுலாத்தலமாக உள்ள கொடைக்கானலுக்கு நாள்தோறும் ஏராளமான பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு இங்குள்ள சுற்றுலா தலங்களில் சில தினங்களாக சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்தது.
நேற்று காலை முதலே முக்கிய சுற்றுலா தலங்கள் அனைத்திலும் பயணிகள் வருகையின்றி வெறிச்சோடி காணப்பட்டது. எப்பொழுதும்பரபரப்பாக காணப்படும் ஏரி சாலை வெறுமனே இருந்தது. ஏரியில் படகு சவாரி இல்லை.