கூட்டுறவு பயிர் கடன் வாங்குவதில் டெல்டாவை விஞ்சிய கொங்கு
கூட்டுறவு பயிர் கடன் வாங்குவதில் டெல்டாவை விஞ்சிய கொங்கு
ADDED : டிச 07, 2024 03:29 AM

சென்னை: தமிழகத்தில் வேளாண் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு, கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் பயிர் கடன்கள் வழங்குகின்றன.
இதற்கு, 7 சதவீதம் வட்டி. ஓராண்டிற்குள் கடன் தொகையை செலுத்தி விட்டால், வட்டி முழுதும் தள்ளுபடி செய்யப்படும்.
நடப்பு, 2024 - 25ம் நிதியாண்டில், 16,500 கோடி ரூபாய் பயிர் கடன்கள் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதில், ஏப்ரல் முதல் நவம்பர் வரை, 11.19 லட்சம் விவசாயிகளுக்கு, 9,973 கோடி ரூபாய் பயிர் கடன்கள் வழங்கப்பட்டு உள்ளன.
இந்த கடனை அதிகம் வாங்கியதில் டெல்டா மாவட்டங்களை விட, கொங்கு மண்டலத்தில் உள்ள மாவட்டங்களே முன்னணியில் உள்ளன. இதற்கு அந்த மண்டலத்தில், மஞ்சள் உள்ளிட்ட பணப்பயிர் விளைவதும், அதற்காக அதிக தொகையை கடனாக வாங்குவதும் காரணமாக தெரியவந்துள்ளது.