ADDED : பிப் 07, 2025 10:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:'மாஞ்சோலை மக்களிடம், முதல்வர் நடந்து கொண்டது, அப்பட்டமான மனித உரிமை மீறல்' என, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
திருநெல்வேலி வந்த முதல்வர் ஸ்டாலினை சந்திக்க வேண்டும்' என, மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள், பத்துக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின், ஆறு பேர் மட்டும் சுற்றுலா மாளிகைக்கு அழைத்து செல்லப்பட்டனர். முதல்வர் ஸ்டாலின், தொழிலாளர்களிடம் என்ன குறை என்று கேட்காமல், ஒரு வார்த்தை கூட பேசாமல், மனுவை மட்டும் வாங்கிக் கொண்டு திருப்பி அனுப்பியுள்ளார்.
மண்ணுரிமையும், வாழ்வுரிமையும் மீட்க போராடிக் கொண்டிருக்கும், மாஞ்சோலை மக்களிடம், தமிழக முதல்வர் நடந்து கொண்டது அப்பட்டமான மனித உரிமை மீறல்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.