செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை துணிச்சலுடன் பிடித்த மூதாட்டிக்கு பாராட்டு
செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை துணிச்சலுடன் பிடித்த மூதாட்டிக்கு பாராட்டு
ADDED : பிப் 12, 2024 09:10 PM

திருக்குறுங்குடி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட திருக்குறுங்குடி, மேல ரத வீதியை சேர்ந்த அமராவதி (65) என்பவர் வீட்டிற்கு முன்பு கோலம் போடுவதற்காக வெளியே நின்று கொண்டிருந்த போது, மாவடிபுதூர், வடக்கு தெருவை சேர்ந்த அருணாச்சல பாண்டியன் (35) என்பவர் அவரிடம் விலாசம் கேட்பது போல் கேட்டு அமராவதியில் கழுத்தில் இருந்த 10 பவுன் தங்க செயினை பறித்து சென்ற அருணாச்சல பாண்டியனை அமராவதி அமராவதி மற்றும் அவருடைய வீட்டிற்கு அருகே உள்ள கலா(40) என்பவரும் சேர்ந்து துணிச்சலுடன் பிடித்து திருக்குறுங்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன், செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை துணிச்சலுடன் செயல்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்ததை பாராட்டி அமராவதிக்கு வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.