ADDED : அக் 24, 2024 02:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி,:பழநி முருகன் கோயில் கும்பாபிஷேகம் 2023 ஜன., 27 ல் நடைபெற்றது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு ராஜகோபுரத்தின் வலதுபுற சுதை சிற்பம் சேதமடைந்தது. ஆகம விதிப்படி சீரமைக்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்தது.
இதையடுத்து ராஜகோபுரம் சீரமைக்கும் பணிகள் நடந்தன. இலகு கும்பாபிேஷகத்திற்காக நேற்று மாலை யாக பூஜைகள் நடைபெற்றன. ஐந்து நிலை ராஜகோபுரத்தின் உச்சியில் சேதமடைந்த வடக்கு பகுதி சுதை சிற்பம் சீரமைக்கப்பட்டு இன்று அதிகாலை 5:00 -5:45 மணிக்குள் இலகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.