தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/மத்திய அமைச்சர், ராஜ்யசபா எம்.பி., பதவியிருந்து எல்.முருகன் திடீர் ராஜினாமா முடிவு ஏன்?

மத்திய அமைச்சர், ராஜ்யசபா எம்.பி., பதவியிருந்து எல்.முருகன் திடீர் ராஜினாமா முடிவு ஏன்?

மத்திய அமைச்சர், ராஜ்யசபா எம்.பி., பதவியிருந்து எல்.முருகன் திடீர் ராஜினாமா முடிவு ஏன்?

28


UPDATED : அக் 14, 2026 05:08 AM

ADDED : அக் 14, 2026 04:21 AM

Follow on GoogleFavourite on Google

28

UPDATED : அக் 14, 2026 05:08 AM ADDED : அக் 14, 2026 04:21 AM


28
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது சிறப்பு நிருபர் -

மத்திய அமைச்சர் மற்றும் ராஜ்யசபா எம்.பி., பதவிகளில் இருந்து விலகுவதாக, பிரதமர் மோடிக்கு, மத்திய தகவல் தொடர்பு மற்றும் பார்லிமென்ட் விவகாரத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் கடிதம் எழுதியுள்ளார்.

விலகுவது ஏன்?


ஆர்.எஸ்.எஸ்., மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தில் இருந்து, பா.ஜ.,வுக்கு வந்த முருகன் 2017ல் தேசிய பட்டியலின ஆணையத்தின் துணை தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.

கடந்த, 2021 சட்டசபை தேர்தலில், தாராபுரம் தொகுதியில் தோல்வி அடைந்த அவர், 2021 ஜூலை 7ல் மத்திய இணை அமைச்சராகப் பொறுப்பேற்றார். 2024 லோக்சபா தேர்தலில், நீலகிரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தாலும், அவருக்கு மீண்டும் மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. தற்போது மத்திய அமைச்சர் பதவியையும், ராஜ்யசபா எம்.பி., பதவியையும் முருகன் ராஜினாமா செய்துள்ளார்.

அவர் மீண்டும் பா.ஜ., மாநில தலைவராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக ஒரு தரப்பினர் தெரிவிக்கின்றனர். மற்றொரு தரப்பினரோ, 'பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ., தேசிய தலைவர் நிதின் நபின் ஆகியோர் எடுத்த முடிவின்படியே முருகன் ராஜினாமா செய்துள்ளார். முருகன் மீண்டும் மாநில தலைவராகும் வாய்ப்பு மிகவும் குறைவு' என்கின்றனர்.

பதவியை ராஜினாமா செய்த பின் பேட்டியளித்த எல்.முருகன், ''தமிழகத்திலிருந்து லோக்சபா தேர்தல் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டு, டில்லிக்கு வர விரும்புகிறேன்,'' என்று கூறினார்.

2030 வரை பதவிக்காலம்

கடந்த, 2021 ஜூலை 7ம் தேதி மத்திய இணை அமைச்சரான முருகன், 2021 செப்டம்பரில் மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து ராஜ்யசபா எம்.பி.,யானார். இந்தப் பதவி, இரண்டரை ஆண்டுகளில் முடிந்த நிலையில், 2024 ஏப்ரல் 3ல், இரண்டாவது முறையாக, அம்மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வானார். அவரது எம்.பி., பதவிக்காலம், 2030 ஏப்ரல், 2ம் தேதி வரை இருக்கும் நிலையில், விலகுகிறார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us