ADDED : அக் 24, 2024 01:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:மதுரை, செல்லுார், பந்தல்குடி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியராஜன்; கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் பெய்த மழையால் பந்தல்குடி கால்வாயில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
அப்போது கால்வாயின் ஒரு பகுதியில் குப்பை அடைத்து இருந்ததால், அதை அகற்றுவதற்காக பாண்டியராஜன் கால்வாய்க்குள் இறங்கினார்.
அப்போது எதிர்பாராதவிதமாக நீரில் அடித்து செல்லப்பட்டார். கால்வாய் பாலத்தின் கீழ் குப்பைக்குள் சிக்கிய அவரை, தீயணைப்பு வீரர்கள் இரண்டு மணிநேரம் போராடி சடலமாக மீட்டனர்.
இதற்கிடையே மீட்புப் பணி தாமதமாக நடந்ததால் அவரது உறவினர்கள் வாக்குவாதம், போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்தனர். பலியான பாண்டியராஜனுக்கு மனைவி சிவகாமி, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

