தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ சுவர் இடிந்து விழுந்து கூலி தொழிலாளி பலி

சுவர் இடிந்து விழுந்து கூலி தொழிலாளி பலி

சுவர் இடிந்து விழுந்து கூலி தொழிலாளி பலி


ADDED : அக் 23, 2025 12:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 23, 2025 12:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டம் சின்ன ஏர்வாடியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ரவி 46.

இவர் கீழக்கரையில் ஆடறுத்தான் தெருவில் பழைய ஓட்டு கட்டடத்தை பிரிக்கும் முயற்சியில் சில பணியாளர்களுடன் நேற்று ஈடுபட்டிருந்தார். மதியம் 2:00 மணிக்கு ஓட்டு வீட்டின் சட்டத்தை பிரித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக பக்கவாட்டு சுவர் ரவியின் இடுப்புக்கு கீழ் பகுதியில் சாய்ந்தது.

அக்கம் பக்கத்தினர் சுவரின் இடையில் மாட்டிய ரவியை மீட்டு கீழக்கரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் இறந்தார். கீழக்கரை போலீசார் விசாரிக் கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us