உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : நவ 28, 2026 08:30 PM
அ நிறம் | அளவு
ஜோலார்பேட்டை: திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே, ஏரியில் மீன் பிடிக்க சென்ற தொழிலாளி ஜெய்சங்கர், 50, நீரில் மூழ்கி பலியானார்.
தாமலேரிமுத்துார் பஞ்.,க்கு உட்பட்ட ஊரான் வட்டம் பகுதியை சேர்ந்தவர், கூலி தொழிலாளி ஜெய்சங்கர். இவர், இன்று (நவ.,28) தாமலேரிமுத்துார் பகுதியில் உள்ள ஏரியில் மீன் பிடிக்க சென்றார். அப்போது, ஏரியில் தவறி விழுந்து சேற்றில் சிக்கி மூச்சு திணறி பலியானார்.
தகவலறிந்த ஜோலார்பேட்டை தீயணைப்பு துறையினர் மற்றும் ஜோலார்பேட்டை போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, ஏரியில் நீண்ட நேரம் தேடுதலுக்கு பின், சடலத்தை மீட்டனர். இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
