சிறுமியிடம் சில்மிஷம் செய்த தொழிலாளிக்கு கால் முறிந்தது
சிறுமியிடம் சில்மிஷம் செய்த தொழிலாளிக்கு கால் முறிந்தது
UPDATED : நவ 12, 2026 07:57 PM
ADDED : நவ 12, 2026 07:10 PM

திருப்பூர்: சிறுமியிடம் சில்மிஷம் செய்த விஷ்ணு, 24, என்பவர், போலீசாரிடம் இருந்து தப்பியோட முயன்றதில், கீழே விழுந்து கால் முறிந்தது.
திருப்பூர் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த, 12 வயது சிறுமி, நேற்று (நவ.,11) இரவு, இயற்கை உபாதை கழிக்க சென்றார். அப்போது, பின்தொடர்ந்து சென்ற மர்ம நபர் ஒருவர், காட்டுப்பகுதியில் வைத்து, சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு தப்பினார். அதிர்ச்சியடைந்த சிறுமி, பெற்றோரிடம் கூறியுள்ளார். கே.வி.ஆர்., நகர் போலீசார் விசாரித்தனர்.
அதில், சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்டது, அதே பகுதி அம்மிக்கல் கொத்தும் தொழில் செய்து வந்த விஷ்ணு என, தெரிந்தது. போலீசாருக்கு, அய்யம்பாளையம் காட்டுப்பகுதியில், விஷ்ணு மறைந்திருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசாரை கண்டதும், தப்பியோட முயன்ற விஷ்ணு, கீழே விழுந்ததில், அவரது இடது கால் முறிந்தது. அவரை மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்த போலீசார், சிகிச்சைக்குப்பின், விஷ்ணுவை கைது செய்தனர்.
