தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/லேடியா மோடியா கேள்வி நினைவூட்டுகிறது பா.ஜ.,

லேடியா மோடியா கேள்வி நினைவூட்டுகிறது பா.ஜ.,

லேடியா மோடியா கேள்வி நினைவூட்டுகிறது பா.ஜ.,


ADDED : மார் 02, 2024 12:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 02, 2024 12:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருமங்கலம்:''அ.தி.மு.க., பொதுச்செயலராக இருந்த ஜெயலலிதா, 'இந்த லேடியா, அந்த மோடியா' என கோஷம் எழுப்பினார். இன்றைய பொதுச்செயலர் பழனிசாமி யாரை பிரதமராகக் கைகாட்டுவார்,'' என பா.ஜ., பொதுச்செயலர் சீனிவாசன் கேள்வி எழுப்பினார்.

லோக்சபா தேர்தலை முன்னிட்டு, மதுரை மாவட்டம் திருமங்கலம் கப்பலுாரில் பா.ஜ.,வின் சட்டசபை தொகுதி தேர்தல் அலுவலக திறப்பு விழா நடந்தது.

அலுவலகத்தை திறந்து வைத்த மாநில பொதுச்செயலர் பேராசிரியர் சீனிவாசன் பேசியதாவது:

தமிழகத்தில் 10 நாட்களுக்கும் மேலாக போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக பரபரப்பாக உள்ளது. இதில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அ.தி.மு.க.,வினர் பா.ஜ.,வுடன் கூட்டணி இல்லை எனக் கூறி வருகின்றனர். ஜெயலலிதா இருந்தபோது கூட, 'இந்த லேடியா அந்த மோடியா' என்ற கோஷத்தை முன் வைத்தார். ஆனால் தற்போது பழனிசாமி யாரை பிரதமராக ஏற்றுக் கொள்வார்; யாரை பிரதமராக கை காட்டுவார்?

அவர் வெற்றி பெற்றால் காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணியில் உள்ளவர்களை பிரதமராக கை காட்ட முடியுமா?

மோடியை யார் பிரதமராக ஏற்றுக் கொள்கின்றனரோ அவர்களோடு பா.ஜ., கூட்டணி அமைக்கும். தி.மு.க., தலைவர் ஸ்டாலின், வி.சி., தலைவர் திருமாவளவன் உட்பட மோடியை பிரதமராக யார் ஏற்றுக் கொண்டாலும் அவர்களோடு கூட்டணி வைக்கத் தயார்.

இவ்வாறு பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us