ADDED : அக் 08, 2025 03:41 AM
சென்னை:சென்னையைச் சேர்ந்த லலிதா ஜுவல்லரி மார்ட், மூலதன சந்தை ஒழுங்கு முறை அமைப்பான, இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியமான, 'செபி'யிடம் இருந்து, இறுதி கண்காணிப்பை பெற்று, ஆரம்ப பொது பங்கு வழங்கல் வாயிலாக, 1,700 கோடி ரூபாய் திரட்ட முடிவு செய்துள்ளது.
இந்நிறுவனம், கடந்த ஜூன் 6ல், செபியிடம், தனது ஐ.பி.ஓ., ஆவணங்களை தாக்கல் செய்தது. இந்த ஐ.பி.ஓ.,வில், 1,200 கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய பங்குகள் வெளியீடு மற்றும் நிறுவனர் கிரண் குமார், 500 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்வதற்கான சலுகை ஆகியவை அடங்கும்.
புதிய வெளியீட்டில் இருந்து கிடைக்கும் வருமானம், 1,014.50 கோடி ரூபாய் வரை, இந்தியாவில் புதிய கடைகளை அமைக்க, மூலதன செலவினங்களுக்கு நிதியளிக்கும்.
பொது நோக்கங்களுக்காகவும் இருக்கும்.
லலிதா ஜுவல்லரி மார்ட், முதல் தங்க நகை விற்பனை கடையை, 1985ல் சென்னை தி.நகரில் துவக்கியது.
இது, தென் மாநிலங்களில், 56 நகைக் கடைகள் வாயிலாக பி.ஐ.எஸ்., ஹால்மார்க் நகைகளை விற்பனை செய்கிறது.