நீலகிரியில் கட்டுமான பணியின் போது மண் சரிந்து விபத்து; வடமாநில தொழிலாளர்கள் 3 பேர் பலி
நீலகிரியில் கட்டுமான பணியின் போது மண் சரிந்து விபத்து; வடமாநில தொழிலாளர்கள் 3 பேர் பலி
UPDATED : ஜன 17, 2026 04:43 PM
ADDED : ஜன 17, 2026 04:08 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் ஓதனட்டி அருகே கட்டுமான பணியின் போது மண் சரிந்து ஏற்பட்ட விபத்தில் வடமாநில தொழிலாளர்கள் மூன்று பேர் பலியாகினர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் ஓதனட்டி அருகே கட்டுமான பணி நடந்து வருகிறது. தொழிலாளர்கள் குழி தோண்டிய போது மண் சரிந்து விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில், பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மூன்று பேர் மண்ணில் புதைந்தனர்.
பல மணி நேரம் தேடுல் வேட்டைக்கு பின்னர் அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டன. விசாரணையில் அவர்கள் கோல்கட்டா முசிராபாத்தை சேர்ந்த வடமாநில தொழிலாளர்கள் நசீர் உசேன், 24, அப்துல் ரகுமான், 24, உஸ்மான் 40 என்பது தெரியவந்துள்ளது.
மண் சரிந்து விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

