ADDED : செப் 28, 2025 06:33 AM

சர்வதேச சக்திகள், மத மாற்றத்தில் ஈடுபடுகின்றன. கிராம கோவில்களில், பட்டியல் இன மக்களுக்கு பிரச்னை உள்ளது. கோவில்களில் ஏற்படும் சில பிரச்னைகள், மதமாற்றத்துக்கு வாய்ப்பை ஏற்படுத்துவதால், கோவில்களில் சமநிலையை உருவாக்க வேண்டும். மத மாற்றத்தை தடுக்க மத்திய, மாநில அரசுகள் சட்டம் இயற்ற வேண்டும். தமிழக ஆண்கள், மதுவுக்கு அடிமையாகி வாழ்க்கையை இழந்துள்ளனர். ஆனால், டாஸ்மாக் வருவாயை அதிகப்படுத்தும் நோக்கில் தி.மு.க., அரசு செயல்படுகிறது.
முதல்வர் ஸ்டாலின், விளம்பர உலகில் வாழ்கிறார். அவர் மேற்கொண்ட வெளிநாடு பயணத்தில், கிடைத்த முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுமாறு, முன்னாள் முதல்வர் பழனிசாமி கேட்டார். அதற்கு வெள்ளைத்தாளை, அமைச்சர் ராஜா காட்டுகிறார். ராஜாவிடம் ஒன்றும் இல்லை என்பதையே, அவரது செயல் காட்டுகிறது. கூட்டணி ஆட்சியே, எங்கள் கொள்கை; கூட்டணி ஆட்சிக்கு சம்மதிக்கும் கட்சியுடன் வரும் தேர்தலில் கூட்டணி அமைப்போம்.
- கிருஷ்ணசாமி,
தலைவர், புதிய தமிழகம்