தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் 3 பேர் பலி: தலைவர்கள் கண்டனம்

கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் 3 பேர் பலி: தலைவர்கள் கண்டனம்

கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் 3 பேர் பலி: தலைவர்கள் கண்டனம்


ADDED : ஏப் 21, 2025 05:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 21, 2025 05:25 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: திருச்சி மாவட்டம் உறையூரில், கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் மூன்று பேர் இறந்தது, 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுவது அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த 15 நாட்களாக, குடிநீரில் பிரச்னை இருப்பதாக, மாநகராட்சிக்கு மக்கள் புகார் அளித்தும், தி.மு.க., அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததன் விளைவே, இந்த உயிரிழப்புக்கு காரணம்.

மக்களுக்கு மிகவும் அத்தியாவசியமான குடிநீரை கூட, சுகாதாரமாக அளிக்க முடியாத அரசு இருந்து என்ன பயன். ஸ்டாலின் ஆட்சிக்கு வருவதற்கு முன் மனுக்களை வாங்கி, ஒரு பெட்டியில் போட்டார். இதை ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றாவிட்டால், கோட்டைக்குள் வந்து கதவை தட்டி என்னை கேள்வி கேளுங்கள் என்றார். அந்த மனுக்களையே, அவர் இன்னும் நிறைவேற்றியபாடில்லை.

இப்படிப்பட்ட முதல்வர் ஆளும் அரசு, மக்களின் மனுக்களுக்கு, கொஞ்சமும் மதிப்பளிக்காத அரசாகவே இருக்கிறது. மக்களின் குறைகளை கேளாத, நிறைவேற்ற வக்கில்லாத, தி.மு.க., அரசு ஒரு கோமா அரசு. உடனடியாக இந்த உயிரிழப்புகளுக்கு, தி.மு.க., அரசு பொறுப்பேற்க வேண்டும். இறந்தவர்கள் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். தமிழகம் முழுதும் குடிநீரை, சுகாதாரமான முறையில் வழங்க வேண்டும்.

தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை: தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், குற்றங்களை மூடி மறைக்கும், தி.மு.க., அரசின் போக்கு இப்போதும் தொடர்கிறது. சென்னை பல்லாவரத்திலும், குடிநீரில் கழிவுநீர் கலந்ததால், மூன்று உயிர்கள் பறிபோயின. அப்போதும், குடிநீரில் கழிவுநீர் கலக்கவில்லை எனக்கூறிய தி.மு.க., அரசு, அதற்கான பரிசோதனை அறிக்கையை வெளியிடாமல், ஓடி ஒளிந்து கொண்டது. தற்போதும் அதே கதையை முன் வைக்கிறது.

அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன்: மூன்று பேர் இறப்புக்கு பின், உறையூர் பகுதியில் வினியோகம் செய்யப்பட்ட குடிநீரை, மாநகராட்சி நிர்வாகம் அவசரமாக பரிசோதனைக்கு உட்படுத்தி உள்ளது. பொதுமக்களின் அத்தியாவசிய அடிப்படை தேவையான, குடிநீரைக் கூட சுகாதாரமான முறையில் வழங்க முடியாத, திருச்சி மாநகராட்சி நிர்வாகமும், நிர்வாகத் திறனற்ற தி.மு.க., அரசும், அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்புக்கு என்ன பதில் சொல்லப் போகின்றன.

மூன்று பேர் இறப்புக்கான காரணத்தை உடனடியாக கண்டறிய வேண்டும். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு, உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us