ADDED : மார் 30, 2026 01:23 AM

செ ன்னை ஐ.ஐ.டி., பேராசிரியர் பலராமன் ரவீந்திரன், 'உலகை ஆளும் தொழில் நுட்பங்கள்' என்ற தலைப்பில் பேசியதாவது:
பிளஸ் 2 முடித்த மாணவர்கள் அனைவரும், ஐ.டி., எனும் தகவல் தொழில்நுட்பம்; ஏ.ஐ., மட்டுமே படிக்க வேண்டும் என்று நினைத்தால், எதிர்காலத்தில் நாம் சில சவால்களை சந்திக்க நேரிடும்.
உற்பத்தி துறையிலும், கட்டுமான துறையிலும், மனித வள தேவைகள் அதிகரித்து வருகின்றன. அனைத்து துறைகளிலும், வாய்ப்புகள் உள்ளன. தகவல் தொழில்நுட்ப வேலை வாய்ப்புகள், குறைந்து வருவதாகப் பேசுகின்றனர். அப்படி எதுவும் நடக்காது.
புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்துவது குறித்து, மாணவர்கள் கற்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில், பெட்ரோலியம் மற்றும் சுரங்கம் சார்ந்த துறைகளிலும், ஏ.ஐ., பயன்பாடு அதிகரித்துள்ளது.
எனவே, மாணவர்கள், தாங்கள் எந்த துறைகளை தேர்வு செய்து படித்தாலும், அதில் எப்படி ஏ.ஐ.,யை பயன்படுத்துவது என்பதை கற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
