/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மீண்டும் சிறுத்தை நடமாட்டம்? விழுப்புரம் அருகே மக்கள் அச்சம்
/
மீண்டும் சிறுத்தை நடமாட்டம்? விழுப்புரம் அருகே மக்கள் அச்சம்
மீண்டும் சிறுத்தை நடமாட்டம்? விழுப்புரம் அருகே மக்கள் அச்சம்
மீண்டும் சிறுத்தை நடமாட்டம்? விழுப்புரம் அருகே மக்கள் அச்சம்
ADDED : நவ 27, 2025 05:09 AM

விழுப்புரம்: விழுப்புரம் அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக பரவிய தகவலால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
விழுப்புரம் அடுத்த சாலையாம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 45; இவர், நேற்று மாலை அங்குள்ள ஏரிகரை பகுதிக்கு சென்றார். அப்போது, அங்கு சிறுத்தை ஒன்றை பார்த்ததாக, கிராம மக்கள் மற்றும் போலீசார், வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்த சாலையாம்பாளையம், சகாதே வன்பேட்டை, புதுப்பாளையம் கிராம மக்கள் அங்கு திரண்டனர்.
இதையடுத்து, வளவனுார் போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள், அப்பகுதிக்கு விரைந்து வந்து தீவிர தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர். ஏரி முழுவதும் சிறுத்தை அசைவுகள், தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், புலனாய்வு குழுக்களும் அப்பகுதியில் சிறுத்தை தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், கிராம மக்கள் ஏரி பகுதிக்கு செல்ல வேண்டாம் என போலீசார், வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இச்சம்பவத்தால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட் டது.