'கிளாம்பாக்கத்துக்கு முதல்வர் பயணியாக செல்லட்டும்!'
'கிளாம்பாக்கத்துக்கு முதல்வர் பயணியாக செல்லட்டும்!'
ADDED : பிப் 14, 2024 02:24 AM

மின்சார ரயில் நிலையம் விரைந்து அமைப்பதோடு, மெட்ரோ ரயில் திட்டத்தை கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வரை நீடிக்கும் வரையில், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தை செயல்பாட்டில் வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் மக்களுக்கான பிரச்னை ஓரளவுக்காவது குறையும்.
கிளாம்பாக்கம் பஸ் நிலைய பிரச்னையில், தவறான தகவல்களை தொடர்ந்து கூறிக் கொண்டிருக்கும் இரு அமைச்சர்களையும் மக்கள் நம்பவில்லை. அதனால், முதல்வரே கிளாம்பாக்கத்துக்கு ஒரு பயணி போல நேரடியாக சென்று உண்மையை அறிய வேண்டும்.
இந்த விஷயத்தில் மக்கள் பாதிக்கப்படாத வண்ணம், நல்ல முடிவுகளை உடனே எடுக்க வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால், தினந்தோறும் கிளம்பாக்கத்துக்கு பல்வேறு சிரமங்களுடன் சென்று திரும்பும் பயணியர் சாபத்துக்கு தி.மு.க., அரசு ஆளாக நேரிடும்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், ஒரு இட்லி 25 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இட்லியின் விலையே இவ்வளவு அதிக என்றால், மற்றப் பொருட்களின் விலையை சொல்ல வேண்டியதில்லை.
அமைச்சர்களுக்கு லஞ்சமாக பணம் கொடுத்து, பஸ் நிலையத்தில் கடைகளை எடுத்தவர்கள், அனைத்து பொருட்களையும் மிக அதிக விலைக்கு விற்பதை, தமிழக அரசு தடுக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் விலைக் கட்டுப்பாடு சட்டத்தின் கீழ், நியாயமான விலைக்கு பொருட்களை விற்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
ஏ.என்.எஸ்.பிரசாத்,
செய்தி தொடர்பாளர், தமிழக பா.ஜ.,

