உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : மார் 28, 2026 07:25 AM

அ நிறம் | அளவு
அனைத்து தொகுதிகளிலும் அலுவலகம் அமைக்க விடாமல், தி.மு.க.,வினர் தடுக்கின்றனர். வில்லிவாக்கத்தில், இட உரிமையாளரை மிரட்டி ரவுடித்தனம் செய்து காலி செய்ய சொல்கின்றனர். எங்களால், உரிமையாளருக்கு பிரச்னை ஏற்படக்கூடாது என்பதால், நாங்கள் காலி செய்கிறோம். ஆனால், இந்த அராஜகமும் ரவுடித்தனமும் கண்டிக்கத்தக்கது.
எங்களை நம்பியவருக்கு எந்த பிரச்னையும் ஏற்படுத்த விரும்பவில்லை; இதை மக்களிடம் எடுத்துச் செல்வோம். சென்னையில் கூட்டம் நடத்த அனுமதி வழங்கக் கூடாது என முதல் வரும், அவரை சார்ந்த அமைச்சர்களும், அனைத்து மண்டப உரிமையாளர்களையும் மிரட்டி, அழுத்தம் கொடுக்கின்றனர். தி.மு.க.,வின் நெருக்கடியை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். அலுவலகம் இல்லை என்றாலும், தெருத்தெருவாக பிரசாரம் மேற்கொள்வோம்.
- ஆதவ் அர்ஜுனா
தேர்தல் பரப்புரை மேலாண்மை பொதுச்செயலர், த.வெ.க.,
