ADDED : அக் 31, 2024 04:15 AM

தீபாவளி என்பது தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து வணங்குவதே. இத்திருநாளில் நம்மிடம் உள்ள அகங்காரம், பொறாமை, தலைக்கணம் போன்றவற்றை துாக்கி எறிவதோடு மட்டுமின்றி ஒரு தீய குணத்தையாவது எரித்து விட வேண்டும். நாம் எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது நம்மிடம் உள்ள கெட்ட பழக்கங்களான புகைத்தல், பொய் சொல்லுதல், குடிப்பழக்கம் போன்றவற்றில் ஒன்றையாவது விட்டுவிட வேண்டும்.
நம் மனதில் உள்ள இருட்டை விலக்கி ஒளி எனும் வெளிச்சத்தை கொண்டு வருவ-துதான் தீபாவளி. வீட்டில் தீபம் ஏற்றி வைத்து-விட்டு மனதை இருட்டாக வைத்துக்கொள்ள கூடாது. தீபாவளியில் வெடிவெடிப்பது போல் மனதில் உள்ள தீய எண்ணங்களை சிதறடித்து விட பறக்க விட வேண்டும்.
தீபாவளியை பாதுகாப்பாக
கொண்டாடுவது எப்படி?
இந்தியா முழுதும் கொண்டாடும் பண்டிகை தீபா-வளி. குறிப்பாக சிறுவர்கள், இளைஞர்களுக்கு தீபாவளி என்றால் பட்டாசு தான். இருப்பினும் கவனமாக, பாதுகாப்பாக, பட்டாசு வெடிக்க வைக்க வேண்டும். இரவில் பயன்படுத்தப்படும், 'ஒளி' ஏற்படுத்தும் பாட்டாசுகளை வீட்டுக்கு வெளியே வைப்பது நல்லது.
பட்டாசு வைக்கும் இடத்தில் எளிதில் தீப்பிடிக்-கும்படியான பொருட்கள் இருக்கக்கூடாது. குழந்-தைகளை பட்டாசுக்கு அருகே வர விட வேண்டாம். செல்ல பிராணிகளையும் அருகே வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பெரிய-வர்கள் மேற்பார்வையில் மட்டுமே சிறுவர்களை பட்டாசு வெடிக்க வைக்க விட வேண்டும்.
பட்டாசு பற்ற வைக்க, நீள ஊதுபத்திகளை பயன்ப-டுத்துவது நல்லது. தீப்பெட்டி போன்றவற்றை தவிர்க்கலாம். பட்டாசை பற்ற வைத்ததும் அந்த இடத்தை விட்டு வேகமாக நகர்ந்து விட வேண்டும். முதல்முறை பட்டாசு வெடிக்க-வில்லை எனில் அதை அப்புறப்படுத்த வேண்டும். 'ராக்கெட் வெடி' போன்ற உயரத்தில் பறக்கும் பட்-டாசுகளை, திறந்தவெளி இடத்தில் வைத்து வெடிக்க வேண்டும்.
தண்ணீர் அல்லது தீ அணைக்கும் கருவி ஆகிய-வற்றை அருகே வைத்திருப்பது நல்லது. கையில் வைத்துக்கொண்டே பட்டாசு பற்ற வைப்பது தவறு. சாலைகள் நடுவே
பட்டாசு பற்ற வைக்கக்கூடாது

