திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றியே தீருவோம்: ஹிந்து மகா சபை சூளுரை
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றியே தீருவோம்: ஹிந்து மகா சபை சூளுரை
ADDED : டிச 11, 2025 06:57 AM

உளுந்துார்பேட்டை: 'திருப்பரங்குன்றத்தில் தைப்பூச நாளில் தீபம் ஏற்றியே தீருவோம்' என, அகில பாரத ஹிந்து மகா சபா மாநில தலைவர் பெரி.செந்தில் சூளுரைத்துள்ளார்.
அகில பாரத ஹிந்து மகா சபா மாநில தலைவராக பொறுப்பேற்றுள்ள பெரி.செந்திலுக்கு, உளுந்துார்பேட்டை டோல்கேட்டில் நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.
அப்போது அவர் அளித்த பேட்டி:
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்துாணில் தீபம் ஏற்றும் வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிக்கு பெரிய அச்சுறுத்தல் இருக்கிறது. அவருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
திருப்பரங்குன்றம் மலையில் இருப்பது எல்லை அளவைக்கல் கிடையாது. முந்தைய காலங்களில் தீபம் ஏற்றுவதற்காக வைக்கப்பட்ட தீபத்துாண் தான் அது.
திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை நாளில் தீபம் ஏற்ற முடியாவிட்டாலும், தைப்பூச நாளில் தீபம் ஏற்றியே தீருவோம்; இது உறுதி.
வரும் தேர்தலில் தமிழகத்தில் அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து, தி.மு.க.,வுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்துவர்களுக்கும் பிரச்னை என்றால், அவர்கள் அனைவரும் ஒன்று சேர்கின்றனர்.
அதேபோல், ஹிந்துக் களும் தங்களுடைய பிரச்னைகளை களையவும், உரிமைகளை நிலை நாட்டவும் ஒன்றிணைய வேண்டும்.
ஹிந்துக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து, திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதற்குரிய அனைத்து முயற்சிகளையும் முன்னெடுத்து வருகிறோம். ஆக்கிரமிப்பாளர்களிடம் உள்ள கோவில் நிலங்களை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

