தவெக ஆட்சி இருக்குமா என பார்ப்போம்; இபிஎஸ் சந்தேகம்
தவெக ஆட்சி இருக்குமா என பார்ப்போம்; இபிஎஸ் சந்தேகம்
ADDED : செப் 19, 2026 10:27 PM

சேலம்: பல கட்சிக்கு போயிட்டு வந்த அமைச்சர் ஆதவ், கடைசி வரைக்கும் தவெகவில் இருப்பாரா என்று பார்க்கலாம், என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் கட்சி கூட்டத்தில் பங்கேற்ற இபிஎஸிடம், 'அதிமுகவும், தவெகவும் ஒன்று தான்' என்று அமைச்சர் ஆதவ் கூறியது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் பதிலளித்ததாவது; அவர் (அமைச்சர் ஆதவ்) சரியில்லை என்று நினைக்கிறேன். அதிமுக வேறு, தவெக வேறு. அதிமுக பொன்விழா கண்ட கட்சி. தவெக ஆட்சியில் இருக்குமா? இருக்காதா? என்பதை போக போக பார்த்துக் கொள்ளலாம். யார் யாரோ சொல்லுவாங்க, அதை எல்லாம் நீங்கள் கேட்கலாமா? வேடந்தாங்கல் பறவை மாதிரி அங்கு போயிருக்கிறார். பல கட்சிக்கு போயிட்டு வந்தவர். கடைசி வரைக்கும் தவெகவில் இருப்பாரா என்று பார்க்கலாம்.
தவெக தலைவர் விஜய் ஒரு தொகுதிக்கு இரு இடங்களில் பிரசாரம் செய்வது அந்தக் கட்சியின் நிலைப்பாடு. இந்த இரு தொகுதிகளும் அதிமுக வெற்றி பெற்ற தொகுதி. அதிமுகவின் கோட்டை. இரு தொகுதிகளிலும் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும், இவ்வாறு அவர் கூறினார்.
