ADDED : மே 03, 2025 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விஜயின் த.வெ.க., கட்சிக்கு மட்டுமல்ல, எதிர்க்கட்சிகள் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் எது நடத்தினாலும், தி.மு.க., அரசு அனுமதி அளிப்பது கிடையாது.
சமீபத்தில் கூட, பிரதமரின் 'மன் கி பாத்' நிகழ்ச்சியை பார்ப்பதற்காக வைக்கப்பட்டிருந்த, எல்.இ.டி., திரையை காவல் துறை அகற்றியது.
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என சட்டசபையில் பேசப்பட்டது. தற்போது, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசு ஒரு திட்டம் கொண்டு வந்தால், தி.மு.க., எதிர்க்கிறது. தேர்தலுக்கு ஓராண்டு உள்ளது. தே.ஜ., கூட்டணிக்கு விஜய் வருவாரா என்பதை, அப்போது பார்த்துக் கொள்ளலாம்.
- நயினார்
நாகேந்திரன்
தமிழக பா.ஜ., தலைவர்.