தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ சிவப்பு நிறத்துடன் துவக்கலாம் சைலபுத்திரி கொண்டாட்டத்தை!

சிவப்பு நிறத்துடன் துவக்கலாம் சைலபுத்திரி கொண்டாட்டத்தை!

சிவப்பு நிறத்துடன் துவக்கலாம் சைலபுத்திரி கொண்டாட்டத்தை!


ADDED : அக் 01, 2024 08:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 01, 2024 08:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நவராத்திரியின் முதல் நாளில் வாராஹியாக, சைலபுத்திரியாக காட்சி தரும் அம்மனுக்கு, சிகப்பு நிறத்தில் பட்டு அணிவித்து, மல்லிகைப்பூ மற்றும் வில்வம் கொண்டு அலங்கரித்து, வெண்பொங்கல், வெள்ளை சுண்டல் நைவேத்தியமாக வைத்து வழிபட வேண்டும்.

இன்று அமாவாசை. கொலுப்படி கட்டி, கலசம் வைக்க ஏற்ற நேரம், காலை 9:15 - 10:15. மாலை, 4:45 - 5:45

இந்த ஆண்டு நவராத்திரியில் அம்பிகையை எந்த நாளில் எந்த நிறத்தில், எந்த வடிவத்தில் வழிபட வேண்டும் என்பது தெரிந்து, அதன்படி வழிபடுவதால் அம்மனின் முழு அருளையும் பெற முடியும். அம்பிகையின் ஒன்பது விதமான வடிவங்களையும், அவற்றிற்குரிய நிறங்களையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

அம்பிகையின் ஒன்பது விதமான ரூபங்களை வழிபடும் காலமான நவராத்திரி, நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் தீமைகள் அனைத்தையும் அகற்றக்கூடியது. பெண்சக்தியை போற்றும் இந்த பண்டிகையில், துர்க்கையே பிரதான தெய்வமாக வழிபடப்படுகிறாள். புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசைக்குப் பின் வரும் பிரதமை துவங்கி, நவமி வரையிலான ஒன்பது நாட்களும், நவராத்திரி காலமாக கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகை, நாளை துவங்கி, அக்டோபர் 12ம் தேதி வரை உள்ளது. இந்த ஆண்டு அம்பாள், யானை வாகனத்தில் அமர்ந்து வரப் போவதாக கணிக்கப்பட்டுள்ளது.

நைவேத்தியங்களுடன், சுண்டல் வைத்து வழிபட்டால், நவகிரகங்களை சாந்தப்படுத்தி, அவற்றின் நன்மையை பெற்றுக்கொள்ளலாம். நவராத்திரி காலத்தில், வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு தாம்பூலம் கொடுத்து வழி அனுப்பி வைக்க வேண்டும். ஏனெனில், அம்பிகை நம்மை ஆசீர்வதிக்க எவர் ரூபத்திலும் வருவார் என்றும் கூறப்படுகிறது.

ஒரு மனிதனுக்கு வீரம், செல்வம், ஞானம் ஆகிய மூன்றும் இருந்தால் மட்டுமே, வாழ்வில் வெற்றி பெற முடியும். நவராத்திரி வழிபாட்டின் வாயிலாக அவற்றைப் பெறலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us