தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம்: இ.பி.எஸ்.,

ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம்: இ.பி.எஸ்.,

ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம்: இ.பி.எஸ்.,


ADDED : மார் 24, 2024 04:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 24, 2024 04:02 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: திருச்சியில் இன்று முதல் தேர்தல் பிரசாரத்தை அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., துவக்க உள்ளார்.

இந்நிலையில் சமூக வலைதளத்தில் இ.பி.எஸ்., வெளியிட்ட வீடியோவில் கூறியுள்ளதாவது: தமிழக மக்களின் எண்ணங்களின் தேவைகளின் பிரதிபலிப்பே அதிமுக.,வின் தேர்தல் அறிக்கை. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் எங்களது பிரதிநிதிகள் சென்று அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்து அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும் வகையில் இந்த தேர்தல் அறிக்கையினை தயாரித்து உள்ளோம். வெற்று பிம்பங்களோ , விளம்பர நோக்கமோ இன்றி நடைமுறைக்கு சாத்தியமான வாக்குறுதிகள் கொண்ட உண்மையான அறிக்கையை அளித்த பெருமிதத்துடன் உங்களை எல்லாம் சந்திக்க வருகிறேன். தமிழர் உரிமை மீட்போம். ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம். இவ்வாறு அந்த வீடியோவில் இபிஎஸ் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us