ADDED : மார் 01, 2024 08:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:விரைவு ரயில்களில் பழைய பெட்டிகள் நீக்கப்பட்டு எல்.எச்.பி., எனப்படும், நவீன ரயில் பெட்டிகள் படிப்படியாக இணைக்கப்பட்டு வருகின்றன. இந்த பெட்டிகள் எளிதில் தீப்பிடிக்காது, அதிர்வுகள் இல்லாமல், பாதுகாப்பாகவும் வேகமாகவும் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளன.
இவற்றில் சொகுசு இருக்கைகள், மொபைல் போன் சார்ஜிங் வசதி உட்பட பல்வேறு வசதிகள் இருக்கும். எல்.எச்.பி., சாதாரண பெட்டிகளில் 80 படுக்கைகளும், 'ஏசி' பெட்டியில் 72 படுக்கைகளும் இருக்கும்.
துாத்துக்குடி - குஜராத் மாநிலம், ஓக்ஹா இடையே இயக்கப்படும் விவேக் விரைவு ரயிலில் நாளை முதல் எல்.எச்.பி., பெட்டிகள் இணைக்கப்படும் என, தெற்கு ரயில்வே நேற்று அறிவித்தது.

